Random image

கன்னியாஸ்திரிகள் போராட்டத்துக்கு மலையாள திரையுலக பெண்கள் சங்கம் ஆதரவு

கொச்சின்

லாத்காரத்தை எதிர்த்து போராடும் கன்னியாஸ்திரிகளுக்கு மலையாள திரையுலக பெண்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஜலந்தர் மறை மாவட்ட பேராயர் பிரான்கோ முலக்கல் என்பவர் ஒரு கன்னியாஸ்திரியை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.   அந்த  பேராயர் மீது நடவடிக்கை எடுக்காத அரசும் காவல்துறையும் இதில் ஊடகங்கள் தலையிட்ட பிறகு வழக்கு பதிந்தது.  பேராயர் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார்.

இதை எதிர்த்து கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினார்கள்.   கேரள சட்டப்பேரவை உறுப்பினர் ஜார்ஜ் பாதிக்க்கபட்ட கன்னியாஸ்திரியை விலை மாது என விமர்சித்தார்.   இது மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியது.   இந்நிலையில் கன்னியாஸ்திரிகள் போராட்டத்துக்கு மலையாள திரையுலக பெண்கள் சங்கம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

மலையாள திரையுலக பெண்கள் சங்கம் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகைக்கு ஆதரவாக ஏற்கனவே களம் இறங்கி உள்ளது தெரிந்ததே.  அப்போது #அவள்கொப்பம் என்னும் ஹேஷ்டாக்கை உபயோகித்து தங்கள் போராட்டத்தை இச்சங்கம் பிரபலமாக்கியது.   அதே முறையில் தற்போது பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கும் போராட்டம் நடத்த தீர்மானம் செய்துள்ளதாக சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில். “கன்னியாஸ்திரிகளின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த போராட்டத்தில் மலையாள திரையுலக பெண்கள் சங்கம் பங்கு பெறுவதில் பெருமை அடைகிற்டு.   பெண்களின் அச்சமின்மையையும் பலத்தையும் உலகுக்கு காட்டும் சமயம் இது.   நாங்கள் மௌனமாக இருந்த காலம் முடிவடைந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.   அத்துடன் கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் நடிகை ரிமா கலிங்கல் கலந்துக் கொண்டு பேசிய புகைப்படத்தையும் வெளியுட்டள்ளனர்.