இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பே கிடையாது!” நடிகை ஸ்ரீதேவி ஆதங்கம்

ம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே கிடையாது என்று நடிகை ஸ்ரீதேவி கருத்து தெரிவித்துள்ளார்.

1980 வாக்கில் தமிழகத்தில் கனவு கன்னியாக வலம்வந்தர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். சில வருட இடைவெளிக்கு பிறகு சமீப காலமாக படங்களில் மீண்டும் நடித்து வருகிறார்.

தற்போது ஸ்ரீதேவி நடித்துள்ள மாம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அப்போது அவர் கூறியதாவது, மாம் திரைப்படம் தாய், மகள் இடையேயான உணர்வுகள் சம்பந்தப்பட்ட படம். அதனால் கதையை கேட்டதுமே உடனடியாக நடிக்க ஒத்துக்கொண்டேன்.

இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதே போல ரஹ்மான் இசை அமைத்ததினால் படத்தின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது என்றார்.

தற்போது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் தான் நிலவி வருகிறது. பெண்களை  வீட்டை விட்டு வெளியே செல்லவே பயப்படுகிறார்கள். வெளியே  செல்லும் பெண்கள் வீட்டிற்கு வரும் வரை பெற்றோர் மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் இருக்க வேண்டியுள்ளது என்றார்.

மேலும்  பெண்கள் வாழ்வில் எந்தவித  முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் ஸ்ரீதேவி கூறினார்.

உங்களின் மகள்கள் சினிமாவில் நடிப்பார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அதற்கேற்ற சூழல் அமைந்தால் அவர்கள் நடிப்பார்கள் என்று கூறினார்.