‘போர்ட்டர்’ வேலையில் பெண்கள்….. மோடி அரசின் வேலைவாய்ப்பின்மை காரணமா?

ன்றைய உலகில், ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் புகுந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்…. தற்போது, ரயில் நிலையங்களில் சுமைத்தூக்கும் போர்ட்டர் வேலையிலும் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள்….

இந்த அவலத்துக்கு காரணம்,  மோடி தலைமையிலான பாஜக அரசின் நிர்வாக திறமையின்மை என்றும், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தின் எதிரொலி என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மற்றொருபுறம், பெண்கள், தாங்களும் வலிமையாளர்கள்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் இதுபோன்ற கடுமையான பணிகளுக்கு வருவதை வரவேற்பதாகவும் பெரும்பாலோர் தெரிவித்து வருகின்றனர்…

ஏற்கனவே  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ரயில்நிலையத்தில் மஞ்சு தேவி என்ற பெண் போர்ட்டராக பணியாற்றி வருகிறார். இவர்தான் முதன்முதலாக ரயில் நிலையத்தல் போர்ட்டராக கடந்த 2013-ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தவர். பின்னர், இந்த பணிகளுக்கு பெண்களுக்கு வரவேற்பு இல்லாத நிலையில், தற்போது நாட்டில் நிலவும் வேலையின்மை காரணமாக, போர்ட்டர் வேலைக்கு சாதாரண பெண்கள் உள்பட பட்டதாரிகளும் போட்டிபோட்டு சேர்வது தெரிய வந்துள்ளது.

ந்திய வரலாற்றிலேயே கடந்த 5 ஆண்டுகளில்தான் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் போதிய அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை எனவும், படித்த இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் கிடைத்த வேலைக்குச் செல்வதாகவும் மத்திய மாநில அரசுகள் மீது மீது குற்றச்சாட்டு உள்ளது.

படித்த இளைஞர்களின் வேலையின்மை விகிதம் இந்தியாவில் 35.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக , வேளாண்மை துறையில் 2.7 கோடி வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளதாகவும், தொழில்நுட்ப கல்வியில் பட்டம் பெற்ற இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 37.3 சதவீதமாகவும் அதிகரித்து உள்ளது என்று ஆய்வுகள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு உள்ளன.

இதுபோன்ற ஆய்வுகளை நாம் தெரிவிக்கவில்லை, அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தின் நிலையான வேலைவாய்ப்புக்கான மையம் வெளியிட்டுள்ள ’இந்தியாவின் வேலைவாய்ப்பு பிரச்சினை’என்ற தலைப்பிலான அறிக்கையில் வேலை உருவாக்கம், வேலையின்மை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 2017-18ஆம் ஆண்டில் மொத்தம் 46.5 கோடி வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. 2011-12ஆம் ஆண்டில் 47.4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. அதாவது ஐந்து ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. வரலாற்றிலேயே வேலை உருவாக்கம் குறைவது இதுவே முதல் முறையாகும்.

வேளாண்மை, அதைச் சார்ந்த துறைகளில் 2011-12 முதல் 2017-18 வரையிலான ஆண்டுகளில் 2.7 கோடி வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன.

வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரிப்பு

உற்பத்தித் துறையிலும் 35 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. இதன்மூலம் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகளில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 12.6 சதவீதத்திலிருந்து 12.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இலக்கை அடைந்தே தீருவோம்: நிர்மலா சீதாராமன் நம்பிக்கை!

2011-12ஆம் ஆண்டில் 3 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2017-18ஆம் ஆண்டில் 8.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. படிப்பறிவில்லாத இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 1.7 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

10ஆம் வகுப்பு மட்டுமே முடித்தவர்களின் வேலையின்மை விகிதம் 5.9 சதவீதத்திலிருந்து 14.4 சதவீதமாகவும், 12ஆம் வகுப்பு முடித்தவர்களின் வேலையின்மை விகிதம் 10.8 சதவீதத்திலிருந்து 23.8 சதவீதமாகவும், பட்டப் படிப்பை முடித்தவர்களின் வேலையின்மை விகிதம் 19.2 சதவீதத்திலிருந்து 35.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

இதுபோன்ற சூழலில், கிடைக்கும் வேலையை பெறுவதும், தக்க வைப்பதும் இன்றைய இளைய தலைமுறையினரின் தாரக மந்திரமாக உள்ளது.

உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்டுக்கே பச்சேந்திரி பால் போன்ற பெண்கள் ஏறி சாதனை படைத்துள்ள நிலையில், போர்ட்டர் பணி என்ன அவ்வளவு மட்டமா, நாங்கள் இதிலும் சாதிப்போம் என்று கூறுகின்றனர்…  இன்றைய இளம்தலைமுறையினர்…அவர்களின் மன உறுதியைப் பாராட்டுவோம்… வரவேற்போம்….