மகளைக் காக்க கணவனைக் கொன்ற தாய் : சென்னையில் பரிதாபம்…

சென்னை

னது மகளை பலவந்தப் படுத்த முயன்ற கணவனை பாறாங்கல்லை தலையில் போட்டு கொன்ற மனைவி போலீசில் சரண் அடைந்தார்.

சென்னை திருவொற்றியூர் மற்றும் மணலிக்கு இடையில் வசிப்பவர் தேவராஜ்.   சுமார் 40 வயதான இவர் தனது மனைவி மஞ்சுளா மற்றும் 21 வயதான மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார்.   இவர் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களுக்காக பல முறை சிறை சென்றவர்.   மஞ்சுளா தனது வீட்டின் அருகே ஒரு டீக்கடை நடத்தி வருகிறார்.   அந்த வருமானத்தைக் கொண்டு தனது குடும்பத்தை நடத்தி வருவதோடு,  கணவனின் ஜாமீன், மற்றும் வழக்கு செலவையும் நடத்தி வருகிறார்.  துரைராஜ் அவரிடமிருந்து பணத்தை பறித்து தனது உல்லாச வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.  இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு நடைபெற்று வந்துள்ளது.

மஞ்சுளா தனது மகளின் திருமணத்துக்காக பணம் சேர்த்ததால் கணவருக்கு பணம் தர மறுத்துள்ளார்.   அதனால் ஆத்திரமடைந்த தேவராஜ் மகளுக்கு திருமணம் நடக்கவிடாமல் தடை செய்து வந்தார்.   அவர் சமீபத்தில் ஒரு திருட்டு வழக்குக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில் மஞ்சுளா தனது மகளுக்கு திருமணத்தை முடித்து விட்டார்.  மருமகனும் இவர்கள் வீட்டிலேயே வசிக்க ஆரம்பித்தார்,

மகளுக்கு மணம் முடித்து விட்டதால், மஞ்சுளா தனது கணவர் தேவராஜை ஜாமீனில் கடந்த 17ஆம் தேதி எடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.   தனது உறவினர்களைக் காண மஞ்சுளா ஆவடி வரை சென்றிருந்த போது தேவராஜ் தன் மகளை பலவந்தப்படுத்த முயன்றுள்ளார்.  அவரது மகள் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தார் உதவியுடன் தப்பி உள்ளார்.   நேற்று வீட்டுக்கு வந்த மஞ்சுளாவுக்கும் தேவராஜுக்கும் இதனால் கடும் தகராறு வந்துள்ளது.   தேவராஜ் தான் செய்தது தவறில்லை எனவும், அடுத்த சந்தர்ப்பத்துக்காக காத்திருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.   தன் மகளைக் காக்க வேறு வழி தெரியாமல் ஒரு பாறாங்கல்லை கணவரின் தலையில் போட்டு மஞ்சுளா கொன்று விட்டார்.

உடனடியாக மணலி காவல் நிலையம் சென்று நடந்ததைக் கூறி போலிசில் சரண் அடைந்தார்.   அவரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.