தருமபுரி:

பேருந்து நிலைய திறப்பு விழாவை காணவந்த பெண்மணியே அந்த நிலையத்தைத் திறந்து வைத்த சுவாரஸ்யமான சம்பவம் தருமபுரியில் இன்று நடந்தது.

பா.ம.க.வைச் சேர்ந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணியின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இண்டூரில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. 30 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட  இந்த புதிய பேருந்து நிலைய திறப்பு விழா இன்று அன்புமணி தலைமையில் நடந்தது.

அப்போது விழாவை காண வந்திருந்த ஒரு மூத்த பெண்மணியை அழைத்த அன்புமணி, அந்த பெண்மணியை அழைத்தார். அந்த பெண்மணி தயங்கினார். அவரை மீண்டும் அன்புமணி அழைத்தார். இதையடுத்து வந்த அந்த பெண்மணியிடம் கத்திரியைக் கொடுத்த அன்புமணி ரிப்பன் வெட்டி, பேருந்து நிலையத்தைத் திறக்கச் சொன்னார். அந்த பெண்மணியும் வியப்புடன் ரிப்பன் வெட்டி , பேருந்து நிலையத்தைத் திறந்துவைத்தார்.

விழாவுக்கு வந்திருந்த ஒரு பெண்மணியை அழைத்து பேருந்து நிலையத்தைத் திறக்கச் சொன்னது தருமபுரி மாவட்டத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விழாவுக்கு வந்திருந்தவர்கள், “திட்டம் முடிக்கப்பட்டாலும் அரசியல் வி.ஐ.பிக்களின் தேதி கிடைக்காமல் திறப்புவிழா தள்ளி வைக்கப்படும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது. இந்த நிலையில் விழாவுக்கு வந்த பெண்மணியை அழைத்து திறப்பு விழா நடத்தியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றனர்.