முதல் முறையாக மைதானத்திற்கு வந்த பெண்கள்

40 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானிய பெண்கள் முதல் முறையாக ஆண்கள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண ரஷ்யா வந்தனர். உலக கால்பந்து போட்டி ஒரு நாட்டின் சட்டத்திட்டங்களையே மாற்றுமளவிற்கு அதிக ரசிகர்களை கொண்டுள்ளது. ஆண்கள் பங்கேற்கும் போட்டிகளை நேரில் வந்து காண ஈரான் நாட்டு பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுவரை வழக்கத்தில் இருந்து வந்த தடை நேற்றுடன் காணாமல் போனது.
iran womens at stadoum
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று இரவு ஈரான் நாட்டு வீரர்கள் ஸ்பெயினுடன் மோதினர். இதனை நேரில் சென்று பார்க்க ஈரான் அரசு பெண்களுக்கு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து நேற்று ரஷ்யாவில் உள்ள காசானா மைதானத்திற்கு தங்கள் தேசிய அணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பெண்கள் வருகை தந்தனர். இதே போல் ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள மைதானத்தில் ஈரான் – ஸ்பெயின் போட்டிகள் நேரடியாக ஒளிப்பரப்பட்டன. இதனை ஆயிரக்கணக்கான பெண்கள் நேரில் சென்று பார்த்தனர்.

கடந்த வாரம் மொராக்கோ உடனான போட்டியில் ஈரான் அணி 1-0 என்ற கோல் அடித்து வெற்றிப்பெற்றதை ஆயிரக்கணக்கான பெண்கள் வீதிகளில் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து மைதானத்திற்கு வந்து போட்டியை காண பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஈரான் அரசு நீக்கியது குறிப்பிடத்தக்கது.