பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்ட பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார்  பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் இன்று லக்னோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதிதாக வாக்குமூலம் அளித்தார். ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் அளித்த வாக்குமூலத்தில் எம்.எல்.ஏ பெயரை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. .

இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதால் புதிதாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் மேஜர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் எம்.எல்.ஏ மீதான சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப்பெற சி.பி.ஐ முடிவு செய்துள்ளது.