Random image

சூட்கேஸில் பதுங்கி துருக்கி நாட்டிற்குள் நுழைய முயன்ற பெண் சிக்கினார்

அன்காரா:

தடையை மீறி சூட்கேஸில் பதுங்கி துருக்கி நாட்டிற்குள் நுழைய முயன்ற பெண்ணை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

துருக்கிக்கு சென்ற ஜார்ஜியாவை சேர்ந்த வாலிபரில் உடைமைகளை  எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சோதனையிட்டனர். அப்போது அவரது பெரிய அளவிலான சூட்கேஸை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.

அதனுள்ளே இளம்பெண் ஒருவர் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அந்த வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர். துருக்கியில் நுழைய அந்த பெண்ணுக்கு தடை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த பெண் சூட்கேஸில் பதுங்கி துருக்கிக்குள் நுழைய முயன்றது தெரியவந்தது. இது குறித்த தீவிர விசாரணை நடந்து வருகிறது.