காஷ்மீரில் கல்வீசும் பெண்களை கட்டுப்படுத்த மகளிர் படை

ஸ்ரீநகர்:

காஷ்மீர் கல்வீச்சு, கலவரம் போன்ற சம்பவங்களால் பாதுகாப்பு படையினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் பெண்களை எதிர்கொள்ள முடியாமல் பாதுகாப்புப் படையினர் சிரமப்பட்டு வந்தனர். கல்வீச்சில் ஈடுபடும் பெண்களை கட்டுப்படுத்த துணை ராணுவப் படையில் கான்ஸ்டபில் அந்தஸ்தில் உள்ள 500 பெண் போலீசார் நியமிக்கப்படவுள்ளனர்.

இரவு நேரப் பாதுகாப்பு, கவசமின்றி கலவரங்களை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.