லண்டன்:

மகளிர் உலககேப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்துக்கு சாம்பியன் பட்டம் வென்றது.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் கடந்த 15-ம் தேதியுடன் லீக் போட்டிகள் முடிந்தன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

முதல் அரையிறுதியில் இங்கிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 2-வது அரை இறுதியில்இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

இறுதி போட்டி இன்று லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.

இரு அணியிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அந்த அணிக்கு லாரன் வின்பீல்டு, பியோமன்ட் ஆகியோர் சிறப்பான துவக்கம் அளித்தனர். . ஷிகா பாண்டே பந்துவீச்சில் பியோமன்ட் தொடர்ந்து இரண்டு பவுண்டரி விளாசினார். . தன் பங்கிற்கு ராஜேஸ்வரி பந்தில் வின்பீல்டு பவுண்டரி அடித்தார்.  இவர் 24 ரன்களில் அவுட் ஆனார். . பூணம் யாதவ் ‘சுழலில்’ பியோமன்ட் (23), கேப்டன் ஹெதர் நைட் (1)  ஆட்டமிழந்தனர்.

பிறகு சாரா டெய்லர், நடாலியா ஜோடி இனைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.  ஜுலன் கோஸ்வாமியில் வேகப்பந்து வீச்சில்,  சாரா டெய்லர் (45), வில்சன் (0)  ஆட்டமிழந்தனர்.

நடாலியா (51) அரை சதம்  எடுத்தார்.  காத்ரினா (34) ரன்-அவுட்டானார். முடிவில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்தது. ஜென்னி (25), லாரா (14)  ஆகியோர் ஆட்டமிழக்கமல்  இருந்தனர்.இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜுலன் கோஸ்வாமி மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து இந்திய அணிக்கு பேட்டிங் செய்தது.  மந்தனா  ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.  கேப்டன் மிதாலி ராஜ் (17) ‘ரன்களில் ஆட்டமிழந்தார்.  பொறுப்பாக ஆடிய ஹர்மன்பிரீத் கவுர் (51), பூணம் ராத் (86) நம்பிக்கை அளித்தனர். . சுஷ்மா வர்மா, ஜுலான் கோஸ்வாமி  ஆகியோரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

வேதா ஓரளவு சிறப்பாக விளையாடி 35 ரன்கள் எடுத்தார். .மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முடிவில் இந்திய அணி 48.4 ஓவரில் 219 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்டாகி’  வெற்றி வாய்ப்பை இழந்தது.

இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி,  முதன்முறையாக உலக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது.

இங்கிலாந்து அணி நான்காவது முறையாக (1973, 93, 2009, 2017) உலக கோப்பை வென்றது.