கொக்சி,

திரையுலகில் பணியாற்றும் பெண்களுக்காக புதிய அமைப்பு ஒன்றை கேரள திரையுலகை சேர்ந்த பெண்கள் உருவாக்கி உள்ளனர்.

இந்த அமைப்பில் பிரபல நடிகைகள் மஞ்சவாரியார், பார்வதி மேனன் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாகி வருகின்றனர்.

சினிமா தொழிலில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்புக்காகவும், அவர்களுக்க  ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதே இதன் நோக்கம் என்று அமைப்பின் நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

மலையாள சினிமாவில் பெண்களுக்கு இழைக்கக்பட்டு வரும் கொடுமையை அகற்றி,  ஒரு சகோதரத்துவம் ஏற்படவும், நடிகர்களுக்கும்,  தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் இடையே ஒரு பாலமாகவும் இந்த சம்மேளனமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவின் திரைப்பட இயக்குனர், பீனா பால், நடிகர்கள் மஞ்சு வாரியர், பார்வதி தேரவோத், ரிமா கள்ளிங்கல், ரம்யா நம்பீசன், சஜிதா மடதி, இயக்குனர்கள் அஞ்சலி மேனன், விது வின்சென்ட் மற்றும் கேமரா பௌஷியா பாத்திமா ஆகியோர் இந்த சங்கத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்.

இவர்கள்  இந்த புதிய அமைப்பை தொடங்கியுடன் , கேரள  முதல்வர் பினராய் விஜயனை நடிகைகள் உள்ளிட்ட ஏராளமான பெண் திரைக்கலைஞர்களும் தொழிலாளர்களும் நேரில் சந்தித்து பாதுகாப்பு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

பெண்கள் அச்சமின்றி மற்ற தொழில்களில் பணிபுரிவது போல் திரையுலகிலும் பணியாற்றும் சூழலை உருவாக்க அனைத்து விதமான ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என்று  உறுதியளித்ததாக நடிகை பார்வதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஏற்கனவே பிரபல  கேரள நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.