நாகப்பட்டினம்: தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் ஆதினம் கலைக் கல்லூரிக்கு தேசிய மகளிர் ஆணையம் 12 ஆம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பியது. அது, ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நான்கு மாணவிகள் மற்றும் இரு ஆண் நண்பர்களும் இணைந்து மது அருந்துவதாக வெளியான ஒரு காணொளியின் விளைவாக 4 பெண் மாணவிகளை கல்லூரியை விட்டு வெளியேற்றியது சம்பந்தமாக அனுப்பப்பட்டதாகும்.

மேற்குறிப்பிட்ட அந்த மது விருந்து கடந்த நவமபர் மாதம் நடந்ததாகவும், அந்த மாணவிகள் கல்லூரி சீருடையில் இருந்ததால் சமூக ஊடகங்களில் வைரலானதாகவும், அதன் பின்னான நடவடிக்கையில் கல்லூரி நிர்வாகம் அந்த 4 மாணவிகளையும் கல்லூரியிலிருந்து வெளியேற்றியதாகவும் செய்திகள் கூறுகிறது.

தேசிய மகளிர் ஆணையத்த்திற்கு இந்த நடவடிக்கைக் குறித்து அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் சங்கம் கடிதம் அனுப்பியிருந்தது. அந்தக் கடிதத்தில் 4 மாணவிகளும் எந்த முன்னறிவிப்போ அல்லது வேறு ஒழுங்கு நடவடிக்கையோ மேற்கொள்ளாமல் வெளீயேற்றப் பட்டிருப்பது சுட்டிக்காட்டப் பட்டிருந்தது.

ஆணையத்தின் கடிதத்தைப் பெற்ற கல்லூரி நிர்வாகம் தாம் அந்த காணொளி வைரலாகியதால் இதற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நிறைய அழுத்தங்கள் அநுபவித்ததாக கூறியது. மேலும் டிசம்பர் மாதத்தில் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் விசாரணை நடத்தியதாகவும் இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததாகவும் கூறியது.

எவ்வாறாயினும், மாணவர்களை வெளியேற்றுவதற்கான முடிவு நியாயமானது என்று அந்த கல்லூரி முதல்வர் கூறினார். தண்டனையின் தீவிரம் குறித்து அவர் கேட்டபோது, “அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்“, என்று கூறிய அவர் மேலும், அவர்கள் தொலைதூரக் கல்வி முறைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும அதை அம்மாணவர்களின் பெற்றோர் ஏற்றுக்கொண்டு நன்றி கூறியதாகவும் தெரிவித்தார்.