மகளிர் தின ஸ்பெஷல்: 2 விமானங்களை பெண்களே இயக்கி சாதனை!

பைலட் தீபாவுடன் (கருப்பு கோட் அணிந்திருப்பவர்)  விமான பெண்கள் குழுவினர்

சென்னை:

ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து சென்ற இரண்டு ஏர் இந்தியா விமானங்களை பெண் பைலட்களே இயக்கி சாதனை புரிந்துள்ளனர்.

ஒரு விமானம் சென்னையில் இருந்து டில்லிக்கும், மற்றொரு விமானம் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கும் இயக்கப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்து உள்ளது.

 

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுக்க ஒவ்வொரு நிறுவனங்களும் பெண்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனமும் பெண் பைலட்கள் மற்றும் பணிப்பெண்களை கொண்டு இரண்டு விமானங்களை இயக்கியது.

சென்னையிலிருந்து டெல்லிக்கு இயக்கப்பட்ட விமானத்தை தீபா என்ற பெண் விமானி இயக்கினார். இவருடன்,தொழில்நுட்ப உதவியாளர்களாக பெண்களே பங்கேற்றனர்.  அதேபோல சிங்கப்பூர் செல்லும் விமானத்தையும் பெண்கள் குழு இயக்கியது. மகளிர் தினத்தை முன்னிட்டு உற்சாகமாக பெண்கள் குழுவினர் விமானத்தில் பறந்து சென்றனர்.

பெண்கள் தினத்தை முன்னிட்டு விமானத்தில் பயணிக்க வந்தவர்களுக்காக ஏர் இந்தியா ஊழியர்கள் கேக் வெட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.