மகளிர் தினத்தன்று இளஞ்ஜோடிகளை விரட்டியடித்து சிவசேனா அராஜகம்!

கொச்சி,

ர்வதேச மகளிர் தினமான நேற்று, சுற்றுலா தலமான கொச்சி கடற்கரையில் அமர்ந்த இளஞ்சோடிகளை விரட்டியடித்து அராஜகத்தில் ஈடுபட்டனர் கேரள சிவசேனா அமைப்பினர்.

சிவசேனா தொண்டர்களின் இந்த அநாகரிகமற்ற அராஜக செயலுக்கு கேரள அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிவசேனாவின் மனிதாபிமானமாற்ற செய லுக்கு பொதுமக்கள் கடும் கண்டனத்தையும் தெரிவித்து உள்ளனர்.

சிவசேனாவினர் கடற்கரையோரம் அமர்ந்திருந்தவர்களை விரட்டியடிக்கும் காட்சி கேரள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது.

 

அதில், சிவசேனா தொண்டர்களின் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. அவர்களது கையில் கொடி கட்டப்பட்ட கம்புகள் உள்ளது. ஊர்வலம் கடற்கரை பகுதிக்கு வருகிறது. அப்போது ஊர்வலத்தில் வருபவர், அங்கு அமர்ந்திருந்தவர்களை கம்பால் தாக்கி விரட்டியடிக்கும் காட்சி தெரிய வந்தது.

அவர்களின் தாக்குலுக்கு பயந்து இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சிவசேனா தொண்டர்களின் இந்த அராஜக செயலுக்கு கொச்சி மாநகர மேயர் சவுமினி ஜெயின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டத்தின்கீழ்  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

சிவசேனா தொண்டர்களின் அடாவடி குறித்து, காங்கிரஸ் சட்டமன்ற பிடி.தாமஸ் கூறியதாவது,

 

இதுபோன்ற அத்துமீறல்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.  சர்வதேச மகளிர் தினத்தன்று சிவசேனா கட்சி தனது  குண்டர்கள் மூலம் கடற்கரை பகுதியில் இருந்தவர்களை  விரட்டியடித்தது துரதிருஷ்டவசமானது என்றும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல், ஊமையாக பார்வையாளர்கள் போல காணப்பட்டனர் என்று குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், இதுகுறித்து சட்டமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்டும் என்று கூறி உள்ளார். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து கொச்சி  போலீசார்  கூறியதாவது,

இதுகுறித்து, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளின் புகாரின் பேரில், அடாவடியில் ஈடுபட்ட 5 சிவசேனா தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினர்.