கணவர்கள் மீது அக்கறை….மூடப்பட்ட மதுபான கடையை மீண்டும் திறக்க கோரி பெண்கள் போராட்டம்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியில் இருந்த டாஸ்மாக் மதுபான கடை போராட்டம் காரணமாக 3 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
இதனால் குடிமகன்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மது வாங்கி குடித்தனர். இந்நிலையில், தங்களது கணவர்கள் மது வாங்க வெகுதூரம் சென்று சிரமப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறி குடிமகன்களின் மனைவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மீண்டும் டாஸ்மாக் மதுபான கடையை தங்களது ஊரிலேயே திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராடினர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் விரைந்து வந்து பெண்களை சமாதானப்படுத்தினர். இதற்கிடையில் மதுபான கடை மூடுவதற்கு காரணமாக இருந்த பெண்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் டாஸ்மாக் கடை திறந்தால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.