சென்னை:

ரூ.20 டோக்கன்  கொடுத்து, ஓட்டுக்கு 10ஆயிரம் வழங்கி வெற்றி பெற்றதாக கூறப்படும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ, டிடிவின் அலுவலகம் முன்பு இன்று திடீரென சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கூடி, தங்களிடம் இருந்த 20ரூபாய் டோக்கன்களை வீசி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெ.மறைவுக்கு பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் டிடிவி தினகரன். இவர் தேர்தலின்போது,  வாக்கை உறுதி செய்யும் வகையில், முதலில் ரூ.20 டோக்கன் கொடுத்து விட்டு, பின்னர் வாக்குக்கு  ரூ.10 ஆயிரம் மற்றும் குக்கர் வழங்கியதாக குற்றம் சாட்டப் பட்டது. பலருன்ககு, டோக்கன் கிடைத்த நிலையில், பணம் கிடைக்காத மக்கள், இன்னும் பணம் கேட்டு அமமுகவினரை  தொல்லை படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தண்டையார்பேட்டையில் உள்ள ஆர்.கே.நகர்  எம்எல்ஏ அலுவலகம் முன் திரண்ட அந்த பகுதி பெண்கள், டிடிவியின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதையறிந்த தேமுதிகவினர் யாரும் அலுவலகத்தை திறக்க முன்வராத நிலையில், அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள், தங்களிடம் இருந்த ரூ.20 டோக்கனை வீசி எறிந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிம் பேசிய அந்த பெண்கள், டிடிவி தினகரன் கூறியபடி, இங்கு எந்தவித அடிப்படை வசதிகளும் நடைபெற வில்லை… குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை…  எங்களை ஏமாற்றி வெற்றி டிடிதினகரன், தொகுதி பக்கமே வருவது இல்லை… இதனால்தான், நாங்கள் ஏற்கனவே ஏமாந்ததுபோல, பாராளுமன்ற தேர்தலிலும் ஏமாறக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்துவாக தெரிவித்தனர்.

தினகரனின் சுயரூபத்தை தொகுதி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கொடுத்த 20ரூபாய் டோக்கனை வீசி எறிந்ததாகவும் தெரிவித்து உள்ளனர்.