டில்லி:

நான்கு போட்டிகள் கொண்ட பெண்கள் டி20 சேலஞ்ச் தொடர் மே 6ம் தேதி இந்தியாவில் தொடங்கி மே 11ந்தேதி முடிவடைய  உள்ளது. . இதில் மூன்று அணிகள் கலந்துகொள்கின்றன.

சூப்பர் நோவாஸ், ட்ரையல் ப்ளாஸர்ஸ் மற்றும் வெலாசிட்டி என அணிகளுக்கு பெயர் சூட்டப்பட் டுள்ளது.

இந்த பெண்கள் டி20 போட்டியிலும், ஆண்கள் ஐபிஎல் போட்டியை போன்றே, இந்திய வீராங்க னைகள் மற்றும் உ வெளிநாட்டு வீராங்கனைகளைகளும் பங்குபெற்றுள்ளனர். மொத்தம் 39 வீராங்கனைகள் பங்குபெற்றுள்ளனர்.

பெண்கள்  ஐபிஎல் ப்ளே ஆஃப்  போட்டிகள்  ஜெய்ப்பூரில் சுவாமி மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது

போட்டி அட்டவணை:

மே 6: சூப்பர் நோவாஸ் vs ட்ரையல் ப்ளாசர்ஸ்

மே 8: ட்ரையல் ப்ளாசர்ஸ் vs வெலாசிட்டி

மே 9: சூப்பர் நோவாஸ் vs வெலாசிட்டி

இதில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் மே 11 நடக்கும் இறுதிப்போட்டியில் ஆடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மும்பையில் ஒரே ஒரு போட்டி சூப்பர் நோவா மற்றும் ட்ரையல் ப்ளாசர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் இந்திய டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் துணைகேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகிய இருவரும் முறையே சூப்பர் நோவாஸ் மற்றும்  ட்ரையல் ப்ளாஸர்ஸ் அணியை வழி நடத்தினர்.

சூப்பர் நோவாஸ் இந்த போட்டியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவின் மெக் லானிங், எல்லீஸ் பெர்ரி மற்றும் அலீசா, இங்கிலாந்தின் டேனியல் வாட் ,மற்றும் டேனியல் ஹசல் மற்றும் நியூசிலாந்துன் டிவைன் மற்றும் தாஹூ ஆகியோர் இந்த வருட தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

சூப்பர் நோவாஸ் அணிக்கு டபிள்யு வி ராமனும்,  ட்ரையல் ப்ளாசர்ஸ் அணிக்கு பிஜு ஜியார்ஜும், வெலாசிட்டி அணிக்கு மம்தா மாபென்னும் பயிற்சியாளர்களாக உள்ளனர்.

அணிகளில் பங்கேற்றுள்ள வீராங்கனைகள் விவரம்:

சூப்பர் நோவாஸ்: ஹர்மன்பிரித் கவுர் (கேப்டன்), அனுஜா பட்டீல், அருந்ததிரெட்டி, ஷாம்ரிஅதபத்து (இலங்கை), ஜெமிமா ரோட்ரிகஸ், டிலயா தகுனு (நியூசிலாந்து), மான்ஷி ஜோஷி, நட்டாலி ஷிவர் (இங்கிலாந்து), பூனம் யாதவ், பிரியா புனியா, ராதா பி யாதவ், சோஃபி டெவின் (நியூசிலாந்து) தனியா பாட்டியா (wk)

Supernovas: Harmanpreet Kaur (Captain), Anuja Patil, Arundhati Reddy, Chamari Athapaththu (Sri Lanka), Jemimah Rodrigues, Lea Tahuhu (New Zealand), Mansi Joshi, Natalie Sciver (England), Poonam Yadav, Priya Punia, Radha P Yadav, Sophie Devine (New Zealand), Taniya Bhatia (WK).

ட்ரையல் ப்ளாசர்ஸ்: ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), பார்தி ஃபுல்மாலி, தயாளன் ஹேமலதா, தீப்தி சர்மா, ஹர்லின் டியோல், ஜாசியா அக்தர்,  ஜுலன் கோஷ்வாமி, ஆர்.கல்பனா (wk), ராஜேஸ்வரி கெக்ய்வாட், ஷாகிரா சல்மான் (மேற்கு இந்திய தீவு) சோஃபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து), ஸ்டேபனி டெய்லர் (மேற்கு இந்திய தீவு), சூஸி பேட்ஸ் (நியுசிலாந்து) 

Trailblazers: Smriti Mandhana (Captain), Bharti Fulmali, Dayalan Hemlatha, Deepti Sharma, Harleen Deol, Jasia Akhtar, Jhulan Goswami, R Kalpana (WK), Rajeshwari Gayakwad, Shakera Selman (West Indies), Sophie Ecclestone (England), Stafanie Taylor (West Indies), Suzie Bates (New Zealand).

வெலாசிட்டி: மித்தாலி ராஜ் (கேப்டன்), அமெலியா கெர் (நியூஸி), டேனிலி வியாட் (இங்கிலாந்து), தேவி வைத்யா, எக்தா பிசட், ஹெய்லி மேத்யூ (மேற்குஇந்திய தீவு), ஜகனரா ஆலம் (பங்களாதேஷ்) கோமல் ஷான்சட், ஷபாலி வெர்மா, ஷிகா பான்டே, சுஷ்மா வெர்மா (wk) சுஸ்ரீ டிப்யார்சினி, வேதா கிருஷ்ணமூர்த்தி

Velocity: Mithali Raj (Captain), Amelia Kerr (New Zealand), Danielle Wyatt (England), Devika Vaidya, Ekta Bisht, Hayley Matthews (West Indies), Jahanara Alam (Bangladesh), Komal Zhanzad, Shafali Verma, Shikha Pandey, Sushma Verma (WK), Sushree Dibyadarshini, Veda Krishnamurthy.