டில்லி,

த்தியஅரசு  நாடு முழுவதும  வரும் ஜூலை மாதம் அமல்படுத்த இருக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் பெண்களின் அத்தியாவசிய தேவையான சானிடரி நாப்கினுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமுக வலைதளங்களில் பெண்கள் கடுமையான கண்டனங்களை மத்திய அமைச்சர் அருண்ஜேட்லிக்கு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சராசரி குடும்பப் பெண்ணிடம் மேற்கூறிய இரண்டில் ஒன்றை மட்டுமே வாங்கும் அளவுக்கு பணம் இருந்தால் நிச்சயமாக அவள் சானிடரி நாப்கினைத்தான் முதல் விருப்பமாக தேர்ந்தெடுப்பாள்.

ஆனால் GST அறிவிப்பை பார்க்கும் போது நம் அரசு அப்படி நினைக்கவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது.

குங்குமம், வளையல், சாந்து ஆகியவைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப் பட்டிருக்கையில் சானிடரி நாப்கினுக்கு 12% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இது சோஷியல் மீடியாவில் நன்கு எதிரொலிக்கிறது.  வரி விதிப்பு திட்டம் துவங்கிய போது வீட்டு உபயோகப் பொருட்களுக்கு வரி விலக்கு இருக்கும் என கூறப்பட்டது,

நிதி அமைச்சர் திரு அருண் ஜேட்லியிடம் சானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு தேவை என்பது எடுத்துரைக்கப்பட்டது

ஆனால் GST யின் இறுதி வரையறை வெளியிட்டபோது, குங்குமம், வளையல், சாந்து போன்ற பொருட்களுக்கு வரி விலக்கும்,  சானிடர் நாப்கினுக்கு12% வரி விதிப்பும் கொடுக்கப் பட்டிருந்தது.

இன்னும் கிராமப்புற மகளிரில் 88% சதவிகிதம் பேருக்கு சானிடரி நாப்கின் உபயோகம் பற்றி தெரிந்திராத நேரத்தில் இது போல் வரி விதிப்பு தேவையா என ட்விட்டரில் பல பெண்கள் பொங்குவதை கண்கூடாக காண முடிகிறது.

பெண்களின், சுத்தம், சுகாதாரம், உடல்நலப் பேணுதல் ஆகியவை களுக்கான பொருளுக்கு வரிவிலக்கு இல்லை என்பது ட்விட்டரில் பொங்கும் நம் தாய்க்குலங்களை காணும் பொழுது நன்கு புரிகிறது.

அரசாங்கம் இதை கவனிக்குமா??