கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்துவதில் சினிமா ஒரு புறம் தீவிரமாக இருந்தாலும், சின்னத்திரையும் தங்களுக்கு சலைத்தவர்கள் அல்ல என்றே நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் சன் டிவி.யில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து தள்ளியுள்ளனர். இதில் இதயக்கனி எஸ். விஜயன் என்பவரின் ஆதங்க பதிவு…

கடந்த சில வாரங்களாக, ‘சன் டி.வி’-யில் ஞாயிறு தோறும் பிற்பகலில் சின்னத்திரை நடிகைகளைக் கொண்டு கபடி போட்டி ஒளிபரப்பப்படுகிறது. அரைக்கால் டிராயர், ‘டி’-ஷர்ட் அணிந்த பெண்மணிகள் ஓடி, விளையாடி, குலுங்கியபடி அவர்கள் தோன்றியதை பார்த்து, மனம் கலங்கிப் போனது.

25 ஆண்டுகளுக்கு முன், விஜயகாந்த் நடித்த ‘பி.எஸ்.வி-.பிக்சர்ஸின்’ ஒரு படம் – ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’. அதில் ஆணும்-பெண்ணும் கபடி விளையாடும் ஒரு வக்கிரமான காட்சி இடம் பெற்றது. விஜயகாந்த், ஸ்வப்னா அது போல் நடித்தனர். அப்போதே அது சர்ச்சைக்குள்ளானது.

பெண்களை இழிவு செய்யலாமா? என்றெல்லாம் பத்திரிக்கை விமர்சனங்களும் இருந்தன. சன் டி.வி-யில் தற்போது ஒளிபரப்பான கபடி விளையாட்டில் திருமணமான பெண்கள் (நடிகைகள்) இருந்தனர். அவர்களது கணவன்மார்கள் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை? திருமணமாகாத பெண்களின் அப்பா- அம்மாவிற்கு சொரணையில்லையா? ஏன், அப்படி விளையாடி நடித்த அந்த பெண்களுக்கு இது தவறு, பொது மக்கள் பார்வையில் இது போல் கவர்ச்சியாகத் தோன்றக் கூடாது என்ற எண்ணம் வரவில்லையா?

இன்நிகழ்ச்சி பற்றிய டிரைலர் தொடர்ந்து டி.வி-யில் வந்தது. இதை பார்த்த மகளிர் அமைப்புக்கள் என்ன செய்தன? இதை ஒளிபரப்பிய சன்.டி.வி, நாடு நாசமாக வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறை கொண்டதாகும். தீந்தமிழ்நாடு, தீய தமிழ் நாடாகிவிட்டதா?

இவ்வாறு இந்த நெட்டிசன் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.