உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை: இறுதி சுற்றுக்கு மேரி கோம் தகுதி

பெண்கள் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு ஆறாவது தங்கப்பதக்கத்தை மேரி கோம் பெற்று தருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

boxing

10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி சுற்றின் 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற மேரி கோம் வடகொரிய வீராங்கனை கிம் ஹயாங் மியை எதிர்கொண்டார்.

இதில் சிறப்பாக செயல்பட்ட மேரி கோம் வடகொரிய வீராங்கனையை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதற்கு முன்பு நடைபெற்ற காலிறுதி சுற்றில் சீனா வீராங்கனை யூ வூ வை எதிர்கொண்ட மேரி கோம் அவரை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவிற்கு நிச்சயம் பதக்கம் உள்ளது என்பதை மேரி உறுதிப்படுத்தினார்.

இதுவரை மேரிகோம் ஐந்து தங்கம் மெற்றும் ஒரு வெள்ளிபதக்கங்களை வென்றுள்ளார். இவர் 2010ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி போட்டியில் தன்னுடன் மோதும் வீராங்கனையை வீழ்த்தி வெற்றியடைவேன் என மோரி கோம் தெரிவித்துளார்.