மகளிர் உலக கோப்பை டி20: இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி வெளியேற்றம்

--

மகளிர் உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து உடனான போட்டியில் 8விக்கெட் வித்யாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது.

women

6வது மகளிர் உலக கோப்பை போட்டி தென் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதே அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் நியூசிலாந்து, அயர்லாது, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளை வெற்றிப்பெற்ற இந்தியா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. அரையிறுதி சுற்றில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய அணி வீராங்கனைகள் ஏமாற்றம் அளிக்க 19.3 ஓவர்கள் முடிவில் இந்திய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி வீராங்கனைகள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து, இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இறுதி சுற்றில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியுடன் பலபரீட்சை நடத்த உள்ளது. இந்த போட்டி வரும் 25ம் தேதி ஆண்டிகுவாவில் நடைபெற உள்ளது.

அரையிறுதியில் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய அணி மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டியில் இருந்து வெளியேறியது.