ஆகாரமின்றி வாழ்ந்த  அதிசய சாமியார் மரணம்.. 

ஆகாரமின்றி வாழ்ந்த  அதிசய சாமியார் மரணம்..

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள சாரதா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகலாத ஜானி என்கிற சர்னிவாலா மாதாஜி.

உணவு மற்றும் தண்ணீர் அருந்தாமல் கடந்த 76 ஆண்டுகளாக அவர் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது.

‘’ சாப்பாடும், நீரும் அருந்தாமல் உயிர் வாழும் சக்தியை ஆண்டவன் எனக்கு அருளியுள்ளார்’’ என்று அவர் கூறிவந்தார்.

,கடந்த 2003 மற்றும் 2010 ஆண்டில் அந்த அதிசய சாமியாரை   விஞ்ஞானிகள் பரிசோதனை செய்தனர்.

, ‘ உணவு மற்றும் நீர் பருகாமல் வாழும் அபூர்வ சக்தியை அவர் உண்டாக்கி இருந்தார்’’ என்று அந்த விஞ்ஞானிகள் சான்றிதழ் அளித்தனர்.

 எப்போதும் பிரகலாத ஜானி சிவப்பு நிற சேலை அணிந்து பெண்கள் தோற்றத்தில் தான் காட்சி அளிப்பார்.

இதனால் அவரை’’ சர்னிவாலா மாதாஜி’’என்று அவரது சிஷ்யர்கள் மற்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டு வந்தார்.

உடல் நலக்குறைவால் அந்த அதிசய சாமியார் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு இப்போது 90 வயது ஆகிறது.

கடைசிவரை வியப்பான மனிதர்களாகவே சிலர் வாழ்ந்துவிட்டு மறைகிறார்கள்

– ஏழுமலை வெங்கடேசன்