கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகிறது ‘வொண்டர் வுமன்’ ….!

கொரோனா தொற்று குறைந்த பிரிட்டன், கனடா, சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டது.

‘டெனெட்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதே போல மற்ற படங்களையும் ஒவ்வொன்றாக வெளியிட தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில் ஜூன் மாதம் வெளியாகவிருந்து பின்னர் அக்டோபர் மாதம் ஒத்திவைக்கப்பட்ட ‘வொண்டர் வுமன் 1984’ திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர் 25) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.