வீட்டுக்கே கடற்கரையை கொண்டு வந்த பில்கேட்ஸ்!

வாஷிங்டன்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வசித்துவரும் வீட்டில்  எண்ணற்ற அதிசயங்கள் அடங்கி உள்ளது.  உதாரணமாக நீச்சல் குளத்தில் தண்ணீருக்கு அடியில் இருந்தும் இசையைக் கேட்கலாம். இது போன்ற எண்ணற்ற அதிசயங்களை உள்ளடக்கியது அவரின் ஆடம்பர வீடு.

•போர்ஃப்ஸ் பத்திரிகையின் 2017ம் ஆண்டின் மதிப்பீட்டின் படி பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 86 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

• வாஷிங்டனில் உள்ள பில்கேட்ஸ் வீட்டின் மதிப்பு 2014ம் ஆண்டின்படி  123.54 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. அவர் ஆண்டுதோறும் பத்து லட்சம் அமெரிக்க டாலர்களை சொத்து வரியாக மட்டும் செலுத்துகிறாராம்.

•அவரது வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் ஓவியங்களை மாற்ற ஸ்விட்ச் மூலம் மாற்றும் வகையிலான வசதி செய்யப்பட்டுள்ளது.

• அவரது வீட்டின் பரப்பளவு 3,900 சதுர அடி.  அவரது வீட்டில் 60 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் தண்ணீருக்கு அடியிலும் இசையை ரசிக்கலாம்.

• பில்கேட்ஸ்,  தனது விருப்பமான நூல்களுக்காக 2,100 சதுர அடியிலான பிரமாண்ட நூலகத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். லியார்னாடோ டாவின்சி 16ம் நூற்றாண்டில் தனது கைப்பட எழுதிய கோடெக்ஸ் லீசெஸ்டர் எனும் நூல்களின் தொகுப்பையும் அவர் வைத்துள்ளார். 1994ம் ஆண்டு நடந்த ஏலம் ஒன்றில் 30.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலை கொடுத்து இந்த நூல்களை பில்கேட்ஸ்வாங்கினார்.

• திரையரங்கு ஒன்றும் பில்கேட்ஸ் வீட்டில் 20 பேர் வரை அமர்ந்து பார்க்கும் வகையிலான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உயர்தர இருக்கைகளுடன் கூடிய அந்த திரையரங்கில் நொறுக்குத் தீனி சப்ளை செய்ய பாப்கார்ன் இயந்திரமும் இருக்கிறது.

•அவ்வளவு ஏன்?  பில்கேட்ஸின் வீட்டுக்கு அருகில் செயற்கையாக ஒரு கடற்கரையே உருவாக்கப்பட்டுள்ளது. பில்கேட்ஸ்  ஓய்வு நேரங்களில் இந்த பகுதியில் உலவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.   இந்த கடற்கரை இயற்கையாக தெரிவதற்காக செயிண்ட்.லூசியா கடற்கரையிலிருந்து பல ட்ரக்குகளில் கடற்கரை மணலை ஆண்டு தோறும் இங்கு வந்து கொட்டுகிறார்கள்.

• ஓவியங்களையும் பில்கேட்ஸ் விட்டு வைக்கவில்லை. உலகப் புகழ்பெற்ற பல ஓவியங்கள் பில்கேட்ஸ் வீட்டின் வரவேற்பு அறையை அலங்கரிக்கின்றன. புகழ்பெற்ற ஓவியர் வின்ஸ்லோ ஹோமரின் ’லாஸ்ட் ஆன் தி பேங்க்ஸ்’ (Lost on the Grand Banks) என்ற ஓவியமும், ஜார்ஜ் பெல்லோஸின் போலோ க்ரவுட் (Polo Crowd) ஓவியமும் அவரது கலெக்ஷனில் இருக்கிறது. இந்த ஓவியங்களின் மொத்த மதிப்பு மட்டும் 74 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Wonders in world's richest man Bill gates's house
-=-