டில்லி:

கப்பர் சிங் வரியை சுமத்தவிட மாட்டோம் என்று ஜி.எஸ்.டி.யை ‘கப்பர் சிங் வரி’ என்று ராகுல் காந்தி வர்ணித்து இருக்கிறார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஜி.எஸ்.டி. யை ‘கப்பர் சிங் வரி’ என்று வர்ணித்து வருகிறார். நேற்று நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்களின் வரியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதுபற்றி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ நாட்டின் மீது கப்பர் சிங் வரியை சுமத்தவிட மாட்டோம். சிறு, நடுத்தர தொழில்களின் முதுகெலும்பை முறிப்பதையோ, லட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்புகளை பறிப்பதையோ அனுமதிக்க முடியாது.

அதற்கு பதிலாக நிஜமான எளிய வரியை கொண்டு வர வேண்டும். வெறும் பேச்சளவில் செயல்பட்டு, நாட்டின் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் திறமையின்மையை ஒப்புக்கொள்ளுங்கள். ஆணவத்தை கைவிட்டு தவறை சரிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.