டில்லி:

17வது மக்களவையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம்பிர்லா, மக்களவையில் மத ரீதியிலான முழக்கங்கள், ஸ்லோகங்களுக்கு அனுமதி கிடையாது என்று கறாராக தெரிவித்து உள்ளார்.

சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு  நன்றி தெரிவித்து பேசும்போது,  லோக்சபாவில் மதரீதியான முழக்கங்களுக்கு அனுமதி கிடையாது, அதற்கு வேறு இடங்கள் உள்ளது என்று கண்டிப்பாக தெரிவித்தார்.

சபாநாயகர் ஓம் பிர்லாவின் அதிரடி உத்தரவு மக்களவை உறுப்பினர்களுக்கு ஆச்சரியத்தையும், பாஜக உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது.

17வது மக்களவை முதல்கூட்டத்தொடர் கடந்த 17ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது, 17 மற்றும் 18ந்தேதிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபா உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் இடைக்கால தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் செய்து வைத்தார்.

அப்போது, மாற்று கட்சி உறுப்பினர்கள் அவர்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பதவி ஏற்கும் போது, பாஜக எம்.பி.க்கள்  ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே என கோஷங்களை எழுப்பினர்.

தமிழக எம்.பி.க்கள் அனைவரும் த தமிழில் உறுதி மொழி ஏற்றதுடன் தமிழ் வாழ்க. தந்தை பெரியார் வெல்க, திராவிடம் வெல்க என முழக்கங்களை எழுப்பினர். இதற்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்த்து  ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டனர். அதுபோல. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜெய் காளி முழக்கங்களை எழுப்பினர். இடதுசாரிகள் மதச்சார்பின்மையை வலியுறுத்தி முழக்க மிட்டனர். இதன் காரணமாக லோக்சபாவில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சபாநாயகர்  ஓம் பிர்லா, மக்களவையில் மத ரீதியிலான ஸ்லோகன்கள் சொல்ல அனுமதிக்க முடியாது என்று கறாராக தெரிவித்து உள்ளார். மதரீதியான முழக்கங்களை எழுப்புவதற்கு லோக்சபா ஒன்றும் வழிபாட்டுத் தலம் அல்ல. பதாகைகள் ஏந்துவதற்கு லோக்சபா சரியான இடம் இல்லை. அதற்காக பல இடங்களி உள்ளன… விருப்பமுள்ளவர்கள்  அங்கே போய் முழக்கமிடலாம்.. போராட்டம் நடத்தலாம்.  மீண்டும் மீண்டும் முழக்கங்கள் எழுப்பப்ட்டால் நாடாளுமன்ற விதிகளின்படி சபையை நடத்துவதற்காக முயற் சிப்பேன்.

சபைகளில் விவாதங்கள் என்பவை ஒவ்வொருவிதமான சூழல்களில் நடைபெறுகின்றன. லோக் சபாவில் விமர்சனங்களை முன்வைக்கலாம்.. விவாதிக்கலாம் அது வேறு.  அனைத்து கட்சிகளும் என் மீது நம்பிக்கையை வைத்திருக்கின்றன. அவர்கள் என் கடமையை செய்ய விடுவார்கள் என நம்புகிறேன்.

தற்போதைய அரசாங்கம் முழு பெரும்பான்மை பெற்றிருக்கிறது. அதனால் அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. எம்.பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை. எம்.பிக்கள் விவாதங்களை நடத்த கோரினால் அரசு அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஓம் பிர்லா கூறினார்.

ஓம்பிர்லாவின் முதல் பேச்சு பாஜக உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.