விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யும்வரை மோடியை தூங்க விட மாட்டோம்: ராகுல் ஆவேசம்

டில்லி:

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுத்து வரும், பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம் என்று  என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக, நாடாளுமன்ற தேர்தலை எண்ணி அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

பாஜக கோட்டை என்று கருத்தப்பட்ட மத்திய பிரதேசம், சத்திஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில், கோட்டையை தகர்த்து, காங்கிரஸ் கட்சி அரியாசனத்தை கைப்பற்றி உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் அயராத உழைப்பின் பயனா,.  அவர் தலைவராக பதவி ஏற்று ஒரு வருடத்திற்குள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி அபாரமாகவும், அசாத்தியமாகவும்  உயர்ந்து உள்ளது.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சி பதவி ஏற்ற 3 மாநிலங்களில், 2 மாநிலங் களில், காங்கிரஸ் முதல்வர்களின் முதல் கையெழுத்தே, விவசாயிகளின் கடன் தள்ளுபடிதான்.

இதை பெருமையாக தெரிவித்துள்ள ராகுல்காந்தி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம் என்று கூறி உள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி,  விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள்  போராடி வருகின்றன.

ஆனால்,   மோடி அரசு குறிப்பிட்ட 15 – 20 பெரும் முதலைகளுக்கு மட்டுமே சாதகமாக  இருந்து வருகிறது.  சிறுவணிகர்களையும், விவசாயிகளையும் நசுக்கி வருpகறது. இதன் எதிரொலிதான் 5 மாநில தேர்தல் முடிவுகளில் வெளியானது.

இனிமேலும், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் தூங்க விட மாட்டார்கள்  என்று கூறினார்.

ஐந்து மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், ஏற்கனவே காங்கிரஸ் கட்சி  அறிவித்தபடி   விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது என்றும், காங்கிரஸ் தலைவர்கள் விவசாயிகளின் நிலைமையை உணர்ந்துள்ளனர், அதன் காரணமாகவே அவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.