15கி.மீ. தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்து சென்று மக்களை சந்தித்த பிரியங்கா காந்தி!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக சென்ற பிரியங்கா காந்தி மக்களை சந்தித்து பேசினார். இந்திரா காந்தியின் சாயலை கொண்டுள்ள பிரியங்கா காந்திக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்து வருகிறது.

priyanka

தற்போது அரசியலில் களமிறங்கி உள்ள பிரியங்கா காந்தி மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி, உத்திரபிரதேச மாநிலம் லக்னோவிற்கு சென்ற பிரியங்கா காந்தி 15 கி.மீ.தூரத்திற்கு புல்லட் புரூஃப் வேனின் ஊர்வலமாக சென்றார். 15 கி.மீ. தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்து சென்ற பிரியங்கா காந்தி வழிநெடுக்கிலும் மக்களை சந்தித்தார்.

அவருடன் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ராகுல்காந்தியும் உடன் சென்றிருந்தனர். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஒன்றாக வருவதை காண ஏராளமான மக்கள் சாலையில் திரண்டனர். பரப்பான அரசியல் சூழலில் பிரியங்கா காந்தி அரசியலில் ஈடுபட்டு வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பாஜகவை கலக்கமடைய செய்துள்ளது.

பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை விமர்சித்து வரும் பாஜக, ராகுல் கட்சியில் குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.