குஜராத்தில் பா.ஜ.க.வை காப்பாற்றிவிட முடியாது:  ராகுல் காந்தி

டில்லி:

குஜராத்தில், முதல்வர் ஆனந்திபென்னை மாற்றியதால் மட்டும்,  அங்கு   பா.ஜ.க.வை காப்பாற்ற முடியாது என்று  அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

download

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

“குஜராத் மாநிலத்தில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளால் அம்மாநிலத்திலும் பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கவே,  அம் மாநில முதலமைச்சர் ஆனந்தி பென்னை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறது பாஜக.   ஆனால் இப்படி ஆனந்திபென்னை  பலிகடா ஆக்கியதால்   மட்டுமே  அங்கு பா.ஜ.க.வை காப்பாற்றிவிட முடியாது.

குஜராத் பற்றி எரிவதற்கு ஆனந்திபென்னின் இரண்டு வருட ஆட்சி மட்டுமல்ல..  அதற்கு முன் இருந்த     13 ஆண்டு கால மோடியின் ஆட்சியும்தான் காரணம்     ”  என் என்று ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்