“மரங்கொத்தி  பறவையின் கூடுக்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளதை அறிந்த அந்த பறவை, பாம்பை விரட்ட அதனுடன் கடுமையாக போராடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது… இந்த வீடியோவை  இஸ்ரேலில் ஹெர்செலியாவைச் சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர்  அசாஃப் அட்மோனி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

தாய்மையின் இலக்கனமாக திகழும் அந்த மரங்கொத்தி பறவையின் பதற்றமும், ஆக்ரோஷமும்  வீடியோவை பார்ப்போரின் மனதை பதபதைக்க வைக்கிறது….

இஸ்ரேலில் ஹெர்செலியாவைச் சேர்ந்த பொறியாளர் அசாஃப் அட்மோனி என்பவர் கடந்த ஆண்டு (2019) ஜூன் மாதம் பெருவில் உள்ள யாராபா ஆற்றுப் பகுதியில் சுற்றுலா சென்றபோது இந்த வீடியோவை எடுத்ததாக தெரிவித்து உள்ளார்.

மரத்தில் துளையிட்டு வாழும் பறவையினமான மரங்கொத்தி பறவையின் கூடுக்குள் குஞ்சு பொறித்து, அதற்கு இரை தேடிச் சென்றுள்ளது. அப்போது,  இரைதேடிச் ஒரு பாம்பு ஒன்று அந்த கூடுக்குள் சென்றுள்ளது. இதை  அறிந்த அந்த பறவை, தனது குஞ்சுகளைக் காக்க அந்த பாம்பை கொத்தி இழுப்பதும், பாம்பு அந்த பறவையை கொத்த போராடுவதும் பார்போரின் மனதை நெகிழ் வைக்கிறது…

தனது குஞ்சுகளை பாதுகாக்க தனது உயிரையே பணயம் வைக்கும் வகையில் பாம்பை சரமாரியாக கொத்தும் அந்த பறவையின்  தாய்மை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது….