சென்னை: தாம்பரம் ரயில்சே யார்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை , தென்மாவட்ட ரயில்கள் உள்பட 30 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

இதுகுறித்து  தெற்கு ரயில்வேவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தாம்பரம் யார்டில் மேம்பாட்டுப் பணிகள் நடக்கவுள்ளது. இதனால், விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.  அதன்படி,

புதுச்சேரி – சென்னை எழும்பூர் (06116/06115) ரயில்களின் சேவை வரும் 20, 21-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

காரைக்குடி – சென்னை எழும்பூர் (02606), மதுரை – சென்னை எழும்பூர் (02636) ரயில்கள் வரும் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். 

 கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் (02634), ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் (02206), குருவாயூர் – சென்னை எழும்பூர் (06128) ஆகிய ரயில்கள் வரும் 19-ம் தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.

திருநெல்வேலி – சென்னை எழும்பூர் (02632) ரயில் வரும் 19, 20-ம் தேதிகளில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.

குருவாயூர் – சென்னை எழும்பூர் (06128) ரயில் வரும் 19-ம் தேதி விழுப்புரம் வரையும்,

காகிநாடா போர்ட் – செங்கல்பட்டு (07644), காச்சிகுடா – செங்கல்பட்டு (07652), செகந்திராபாத் – தாம்பரம் (02760) ரயில்கள் வரும் 19, 20-ம் தேதிகளில் சென்னை எழும்பூர் வரையும் இயக்கப்படும்.

தஞ்சாவூர் – சென்னை எழும்பூர் (06866), மதுரை – சென்னை எழும்பூர் (02638), மன்னார்குடி – சென்னை எழும்பூர் (06180) ஆகிய ரயில்கள் வரும் 20-ம் தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள் விவரம்

புவனேஸ்வர் – தாம்பரம் சிறப்பு ரயில் (08496) வரும் 19-ம் தேதி பெரம்பூர், அரக்கோணம், காஞ்சிபுரம் மாற்றுவழியாகவும், தூத்துக்குடி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (02694), திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் (06106) சிறப்பு ரயில்கள் வரும் 20-ம் தேதி காஞ்சிபுரம், மேலப்பாக்கம், திருத்தணி மாற்றுவழியாகவும் இயக்கப்படுகின்றன.

செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில்கள் விவரம்

இதேபோல், சென்னை எழும்பூர் – மதுரை (02635), சென்னை எழும்பூர் – காரைக்குடி (02605) சிறப்பு ரயில்கள் வரும் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் செங்கல்பட்டில் இருந்து புறப்படும். சென்னை எழும்பூர் – தூத்துக்குடி (02693), கொல்லம் சிறப்பு ரயில் (06723) வரும் 20-ம் தேதியிலும், செங்கோட்டை சிறப்பு ரயில் (02611) வரும் 20, 21-ம் தேதிகளிலும், திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் (06795), திருசெந்தூர் சிறப்பு ரயில் (06105), ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06851) ஆகியவை வரும் 21-ம் தேதி செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து, மதுரைக்கு இயக்க வேண்டிய வைகை; காரைக்குடிக்கு இயக்க வேண்டிய பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், வரும், 14ம் தேதியில் இருந்து, 21ம் தேதி வரை, நிலையம் மாற்றப்பட்டு, செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்

முத்துநகர், கொல்லம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள்; செங்கோட்டை, ராக்போர்ட், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்; , வரும் 20ம் தேதி செங்கல்பட்டிலிருந்து இயக்கப்பட உள்ளன.

திருச்சி, திருச்செந்துார் மற்றும், ராமேஸ்வரத்துக்கு செல்லும் ரயில்கள், 21ம் தேதி செங்கல்பட்டிலிருந்து புறப்பட உள்ளன.

செங்கோட்டைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், 20 மற்றும், 21ம் தேதிகளில், செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்

செங்கல்பட்டில் இருந்து, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்கும், தாம்பரத்தில் இருந்து, செகந்திரபாத்துக்கும் வரும், 20 மற்றும், 21ம் தேதிகளில், இயக்க வேண்டிய எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள், நிலையம் மாற்றி சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து, கேரளா மாநிலம் குருவாயூருக்கு வரும், 21ம் தேதி இயக்க வேண்டிய சிறப்பு ரயில், நிலையம் மாற்றப்பட்டு, விழுப்புரம் நிலையத்தில் இருந்து, குருவாயூருக்கு இயக்கப்படுகிறது.