மெட்ரோ ரெயில்வேயில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!!

metro-vacanbt1

டில்லி:

ந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது மெட்ரோ ரெயில்வே பணிகள் நடைபெற்று வருகிறது. டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் மெட்ரோ ரெயில்வே பணிகள் நடந்து வருகின்றன.

இதன் காரணமாக வேலைவாய்ப்புகள் பெருகி உள்ளன. டெல்லி மெட்ரோ ரெயில்வேயில் 3 ஆயிரத்து 428 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என  அறிவிக்கப்பட்டு உள்ளது.

மெயின்டனர் பணிக்கு 1393 பணியிடங்களும், ஸ்டேசன் கண்ட்ரோல்/ டிரெயின் ஆபரேட்டர் பணிக்கு 662 பணியிடங்களும், கஸ்டமர் ரிலேசன்ஷிப் அசிஸ்டன்ட் பணிக்கு 1100 பணியிடங்களும், ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 205 இடங்களும் உள்ளன. அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு 44 இடங்களும், அக்கவுண்ட் அசிஸ்டன்ட் பணிக்கு 24 இடங்களும் உள்ளன.

பி.இ., பி.டெக் படித்தவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

என்ஜினீயரிங் பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்களுக்கு ஜூனியர் என்ஜினீயர் மற்றும் டிரெயின் ஆபரேட்டர் போன்ற பணிகளில் வாய்ப்பு உள்ளது. 3 ஆண்டு, 4 ஆண்டு கால பட்டப்படிப்பை முடித்தவர்கள் கஸ்டமர் ரிலேசன் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்தவர்கள் மெயின்டெய்னர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இது பற்றிய விரிவான விவரங்களை http://www.delhimetrorail.com/career.aspx என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

15-10-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.