கோல்பாரா

ட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் குடியிருப்பை அமைக்கும் தொழிலாளர்கள் பலர் தேசிய குடியுரிமை பட்டியலில் இடம் பெறவில்லை.

கடந்த மாத இறுதியில் அசாம் மாநில தேசிய குடியுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது.  இந்த பட்டியலில் சுமார் 19 லட்சம்  பெயர்கள் இடம் பெறவில்லை.  இவர்களைக் கைது செய்து ஒரு குடியிருப்பில் அமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.   அசாமில் உள்ள ஒரு நதிக்கரை ஓரமாக ஒரு ஒதுக்குப்புறத்தில் இவர்கள் தங்க ஒரு குடியிருப்பு அமைக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த குடியிருப்புக்களில் சுமார் 3000 பேர் தங்க முடியும்.  அத்துடன் இந்த குடியிருப்பில், ஒரு பள்ளிக்கூடம், ஒரு மருத்துவமனை, ஒரு மனமகிழ்வு மையம் மற்றும் காவலர்கள் குடியிருப்பும் அமைக்கப்படுகிறது.  இந்த குடியிருப்பைச் சுற்றி மிக உயரமான சுற்றுச் சுவர் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த குடியிருப்பைக் கட்டி வரும் தொழிலாளர்களில் பலரும் குடியுரிமை பெறாதவர்கள் ஆவார்கள்.   அவர்கள் பெயரும் அசாம் தேசிய குடியுரிமைப் பட்டியலில்  இடம் பெறவில்லை.    இவர்கள் அளித்துள்ள  பிறப்பு மற்றும் நில உரிமை ஆவணங்கள் அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.   இதனால்  அவர்கள் தங்களை இந்த பணி முடிந்ததும்  கைது செய்யப்படலாம் என அச்சத்தில் உள்ளனர்.