‘செயல்தலைவர்’ பதவி நீக்கம்: பொதுக்குழுவில் திமுகவில் சட்டவிதிகள் திருத்தம்

சென்னை:

திமுக பொதுக்குழுவில் ஒருமனதான தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து கட்சியின் பொருளாளராக துரைமுருகனும் பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், திமுகவின் சட்டவிதிகளில், செயல்தலைவர் என்ற பதவியை நீக்கி,  திருத்தம் செய்து புதிய தீர்மானங்களை பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

இதனையடுத்து மு.க.ஸ்டாலின் வகித்து வந்த செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர்  க. அன்பழகன் அறிவித்தார்.

மேலும், திராவிட முன்னேற்ற கழகத்தில் புத்தாக தகவல் தொழில்நுட்ப அணி என்று புதிதாக ஒரு அணியை அறிமுகம் செய்துள்ளதாக கூறினார்.
மேலும், மாவட்ட எல்லைகளில் மாற்றம் செய்ய கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட தலைமை அலுவலகங்கள் மாவட்ட தலைநகரில் இருக்கவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.