உலக எய்ட்ஸ் தினம்: உலகம் முழுவதும் 18 மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகள்…

18 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயுடன் போராடி வருகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் (who) தெரிவித்து உள்ளது.

ஆண்டுதோறும் டிசம்பர் 1-ந்தேதி உலக எயிட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் சுமார் 18 மில்லியன் மக்கள் ரெட்ரோ வைரல் தடுப்பு மருந்து மூலம் எயிட்ஸ் நோயை எதிர்த்துப் போராடி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

stop-aids1

பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ். எச்.ஐ.வி எனும் வைரசால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது.

ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய்களை இழக்கும் தன்மையைப் பெறும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். எய்ட்சால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எச்.ஐ.வி இருக்கும். எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் அனைவரும் எய்ட்ஸ் நோயாளியாக மாறுகிறார்கள்.

எச்.ஐ.வி பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் மற்றும் எய்ட்ஸ் நோயாளி தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஆகிய மூன்று முக்கிய வழிகளில் எய்ட்ஸ் தற்போது பரவிவருகிறது.

aids1

எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவர் 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு வரை அந்நோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரியாமலேயே வாழ்வார்.  எய்ட்ஸ் நோய்க்குரிய அறிகுறிகள் தென்படும்போதுதான் அவருக்குள் மறைந்திருந்த ஆபத்தை உணர முடியும்.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“உலகம் முழுவதும் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பாதிபேர் தாங்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளதை அறியாமலேயே உள்ளனர். இதனால் இவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை முறைகளை பெறாமலே போகின்றனர்.

தங்களுக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதை அறிந்த மக்களில் 80% பேர் அதற்கான தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர்.

ஹெச்ஐவி தொற்று இருப்பதை வீட்டில் வைத்தே அறிவதற்கான சுய பரிசோதனை கருவிகளை உலக நாடுகளின் அரசுகள் உருவாக்கி, அவை எளிதாகவும், மலிவாகவும் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மார்கிரெட் சென் கேட்டுக் கொண்டுள்ளார்.

2005 தொடங்கி 2015-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் உலகளவில் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12%-ல் இருந்து 60% ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.