இரண்டாம்  உலகப் போர் நேரத்தை விடச் சரிந்து வரும் உலக பொருளாதாரம் : உலக வங்கி எச்சரிக்கை 

வாஷிங்டன்

ரண்டாம் உலகப் போர் நேரத்தை விட தற்போது உலகப் பொருளாதாரம் சரிந்து வருவதாக உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக உலகெங்கும் தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முழுவதுமாக முடங்கி உள்ளன. இதனால் உலக அளவில் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.   இதுவரை உலக அளவில் 14 முறை இவ்வாறு பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ளன.  அவை 1876, 1885, 1893, 1908, 1914, 1917-21, 1930-32, 1938, 1945-46, 1975, 1982, 1991, 2009 மற்றும் 2020.ஆகிய வருடங்களில் ஏறபடுள்ளன.

உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இதுவரை 1870 ஆம் வருடத்துக்குப் பிறகு 14 முறை உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டது.  அதில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் அதிக அளவில் பொருளாதாரச் சரிவு காணப்பட்டது.  தற்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு அதைவிட வேகமாக உள்ளது.

தற்போதைய நிலவரப்படி இந்த வருடம் பொருளாதார சரிவானது 7.2% வரை ஏற்படலாம் என கணக்கிடப்படுகிறது.   மக்களின் சராசரி வருமானம் 3.6% வரை குறையலாம் என முதலில் கணக்கிடப்பட்டது தற்போது லட்சக் கணக்கானோர் பணி இழந்ததால் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.   குறிப்பாக உலக வர்த்தகம், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் இது அனைத்து நாடுகளையும் பாதிக்கும் காரணியாகும்.” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.