அணை விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்ட உலக வங்கி

ராச்சி

கிருஷ்ணகங்கா அணை விவகாரத்தில் இந்தியா கூறியது போல் பொதுவான நடுவரை அமைக்குமாறு பாகிஸ்தானுக்கு உலக வங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்திய நதியான கங்கை நதியில் கிருஷ்ணகங்கா என்னும் புதிய அணையை இந்தியா கட்டி வருகிறது.   இதற்கு பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.   சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு உலக வங்கியின் மூலம் இந்தியா – பாகிஸ்தான் போட்டுள்ள நதிநீர் ஒப்பந்தத்துக்கு இது எதிரானது என பாக் கூறி வருகிறது.

இந்த ஒப்பந்தத்தின் படி நதியின் நடுவே மின்சாரம் எடுக்க அணைகள் கட்டுவது தவறில்லை எனவும் நதியின் நீரோட்டத்தை தடுக்கக் கூடாது என்பது தான் விதி எனவும் இந்தியா கூறி உள்ளது.   இந்த விவகாரத்தை சர்வ்தேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் உலக வங்கியின் அனுமதியை கோரியது.   அதற்கு இந்தியா பொதுவான நடுவர் மூலம் பேச்சு வார்த்தை நடத்தலாம் என யோசனை தெரிவித்தது.

உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் இந்தியாவின் யோசனையை ஒப்புக் கொண்டுள்ளார்.   அதன்படி சர்வதேச நீதிமன்றத்தை பாகிஸ்தான் அணுக வேண்டாம் எனவும் இந்தியாவின் யோசனைப்படி பொதுவான நடுவரை அமைக்க வேண்டும் என பாகிஸ்தனுக்கு உலக வங்கித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கண்ட தகவலை பாகிஸ்தான் ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்டுள்ளது