ஆதார் மிகவும் சவுகர்யமானது….உலக வங்கி பாராட்டு

டெல்லி:

பயோ மெட்ரிக் அடையாளமாக விளங்கும் ஆதார் இந்தியா முழுவதும் கடன் பெறுவதற்கும், வேலை தேடுவோருக்கும், பென்சன் பெறுவோருக்கும், பண பரிமாற்றம் செய்வோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆதார் தனக்கென்று ஒரு பிரத்யே அடையாள பாதையை வகுத்துக் கொண்டுள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் நரேந்திரமோடி தனது செலவு மிச்சப்படுத்தும் திட்டத்துக்கு ஆதாரின் தயவு அதிகம் தேவைப்படும். ஆனால், இதில் சேகரிக்கப்பட்டுள்ள தகவல்கள் மூலம் தனியார் லாபமடைந்து வரும் கேள்விகளுக்கு தான் இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது.

‘‘ஆதார் போன்றதொரு திட்டத்தை கொண்டு வர இதர நாடுகளும் திட்டமிட்டு வருகின்றன. அதே சமயம் உலகம் முழுவதும் செல்லத்தக்க தரமான அடையாள ஆவணமாக அது இருக்க வேண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன’’ என்று உலக வங்கி முதன்மை பொருளாதார வல்லுனர் பால் ரோமர் தெரிவித்துள்ளார்.

‘‘நான் பார்த்த வரை இந்தியாவில் உள்ள ஆதார் திட்டம் மிகவும் சவுகர்யமான திட்டமாக இருக்கிறது. நிதி பரிமாற்றம் தொடர்பான அனைத்து விதமான தொடர்புகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கிறது. இதை பின்பற்றினால் உலகம் முழுவதுக்கும் இது பயனுள்ள நல்ல திட்டமாக இருக்கும். உலகம் முழுவதும் சுகாதாரம், கல்வி போன்ற சேவையை பெற முதல் படி அடையாளம் காண்பது தான். 1.5 பில்லியன் மக்கள் தங்களை யார் என்று நிரூபிக்க முடியாமல் உள்ளனர்’’ என்று இன்போசிஸ் துணை நிறுவனரும், ஆதார் கொண்டு வந்த யுஐஏஐ முன்னாள் தலைவருமான நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘2030ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் அடையாள ஆவணம் வழங்க ஐ.நா இலக்கும் நிர்ணயம் செய்து வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏழை நாடுகளின் குடிமக்களுக்கு அடிப்படைய உரிமைகளை வழங்குவதற்கு ஏதுவாக ஒரு பிரத்யேக வழித்தடத்தை உருவாக்க வேண்டும். இதன் மூலம் பள்ளி, மருத்துவ பதிவுகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய உதவியாக இருக்கும். குடிபெயர்தலும் முறைப்படுத்தப்படும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இன்டர்நெட் உருவாக்கப்பட்ட போதும், ஏழைகளுக்கு ஆதார் மூலம் பணம் வழங்கும் முறை 2009ம் ஆண்டில் தான் தொடங்கியது. இந்த திட்டத்தின் மீது தான்சானியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் ஏற்கனவே ஆர்வமாக இருக்கின்றன. இதற்காக இந்தியா வந்து விவாவித்து சென்றுள்ளனர் என்று நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.

‘‘ இந்த திட்டத்தை எவ்வாறு அவர்களது நாட்டில் செயல்படுத்தலாம் என்பதை நேரில் வந்து பார்த்து சென்றுள்ளனர், மக்களின் உள்கட்டமைப்புகளை எப்படி நவின டிஜிட்டல் முறையில் கட்டுமானம் செய்ய முடியும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாக இரு க்கிறது. அதோடு அனைவருக்கும் இதை எப்படி நல்ல முறையில் விநியோகம் செய்வது என்பதற்கும் இது சிறந்த முன் உதாரணா கும். ரஷ்யா, மொராக்கோ, அல்ஜீரியா, தன்சியா ஆகிய நாடுகளும் ஆதார் மீது ஆர்வம் கொண்டுள்ளன’’ என்று டிராய் தலைவர் சர்மா தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு உலக வங்கி அறிக்கையில்,‘‘பின் தங்கிய மக்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கங்கள் தகவல் பிரச்னையில் இருந்து வெளிவர இந்தியாவின் ஆதார் அடையாள முறையை பின்பற்றலாம்’’ என்று தெரிவித்துள்ளது.

இது எப்படி பயன்படுகிறது:

இந்திய குடிமகன்களுக்கு 12 இலக்க எண் வழங்கப்ப்டடுள்ளது. இதில் கை விரல் ரேகை, கருவிழி உள்ளிட்ட பயோ மெட்ரிக் தகவல்கள் மைய டேட்டா பேஸாக பதிவாகி இருக்கிறது. வங்கி கணக்கு, சிம்கார்டு போன்றவைக்கு ஆதார் எண்ணை கொடுத்து கை விரல் ரேகையை ஸ்கேனர் கருவியில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் அந்த தனி நபரின் விபரங்களை வங்கி நிர்வாகம் பெற்றுக் கொள்ள முடியும். முன்னதாக அதிக எண்ணிக்கையில் ஆவணங்களை அடையாளத்திற்காக சமர்ப்பிக்க வேண்டி இருந்தது.

நாட்டில் 1.3 பில்லியன் மக்கள் தங்களது பிறப்பை பதிவு செய்யவில்லை. 30 சதவீதம் பேருக்கு தங்களது பெயரை வாசிக்கவோ அல்லது எழுதவோ தெரியாமல் உள்ளனர். இந்தியாவில் 99 சதவீதம் பேர் ஆதார் அடையாள அட்டை வைத்துள்ளனர். இதோடு 84 அரசு திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளது. விரைவில் உலகளவிலான மிகப்பெரிய நலத்திட்டமான பொது விநியோக திட்டத்திலும் சேர்க்கப்படவுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஒரு ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர் மிச்சமாகிறது. 2018ம் ஆண்டு மார்ச்க்கு பிறகு இது 7 பில்லியன் டாலராக அதிகரிக்கும். அல்லது உள்நாட்டு உற்பத்தியில் 0.35 சதவீதமாக இருக்கும்.

 

ஆதார் மூலம் தனியார் நிறுவனங்களும் பயனடைந்து வருகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 100 மில்லியின் சிம்கார்டு, அதாவது ஒரு விநாடிக்கு 7 சிம்கார்டு வீதம் ஆதார் அடையாளா£தை பயன்படுத்தி விற்பனை செய்துள்ளது. கூகுல் நிறுவனமும் ஆதாரை பயன்படுத்த அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிறு நிறுவனங்கள் ஆதார் மூலம் ரத்த கொடையாளர்கள் பட்டியலையும் தயாரித்து வருகிறது. வங்கியில் இருந்து பணம் எடுக்கவும், ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கும் ஆதார் பயன்படுகிறது.

ரகசிய எண் அல்லது ஒரு கார்டு கூட இல்லாமல் இந்த பரிமாற்றத்தை செய்ய முடியும். மைக்ரோ சாப்ட் நிறுவனம் கடந்த மாதம் இந்தியர்களுக்கு என்று ஆதார் அடையாளம் மூலம் பயன்படுத்தும் ஸ்கைப் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
வழக்கம்போல் ஆதார் திட்டத்திற்கும் பெரிய அண்ணன் பாணியில் எதிர்ப்பு இருந்தது. ஏன் இப்போது டிஜிட்டல் இந்தியாவுக்கு ஆதாரை முன்னெடுத்து செல்லும் பிரதமர் மோடியே, இந்த திட்டத்தை முன்பு எதிர்த்தவர் தான். இதன் மூலம் குடிமகன்களின் ரகசியங்களுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக ஆதார் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழவில்லை என்று இந்த அட்டை விநியோகம் செய்யும் நிறுவனம் கடந்த 5ம் தேதி அறிவித்திருந்தது. இதுவும் ஆதார் தகவல்கள் அனுமதியின்றி வெளியானதாக வெளிவந்த செய்திகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

எனினும் தனிநபர் ரகசியம் காக்கப்படுவதில் சிறு சிக்கல்கள் இருக்க தான் செய்கிறது. இணையத்தை கையாளும் தரத்தை உயர்த்த வேண்டும். அரசாங்கமும், தொழில் நிறுவனங்களுக்கும் மக்களின் அடையாள தகவல்களை பாதுகாக்கும் வகையில் பிரத்யேக காரணிகளை வடிவமைக்க வேண்டும்.

தனி மனித சுதந்திரத்தை பாதிப்பதாக கூறி கடந்த 2010ம் ஆண்டு தேசிய அடையாள பதிவை அழிக்கப்போவதாக பிரிட்டன் அறிவித்தது. எனினும் பயோ மெட்ரிக் குடியிருப்பு அனுமதியை வெளிநாட்டினருக்கு அந்நாடு தொடர்ந்து வழங்கி வருகிறது. அதேபோல் பயோ மெட்ரிக் தகவல்கள் அடங்கிய பெரிய அளவிலான தகவல் களஞ்சியம் ஏற்படுத்த பிரான்ஸ் விவாதம் நடத்தி வருகிறது.

கடந்த 2015ம் ஆண்டில் அடையாள தகவல் திருட்டு தொடர்பாக அதிக புகார்கள் வந்ததாக அமெரிக்க வர்த்த கமிஷன் கூட்டமைப்பு தெரிவித்தது. எனினும் அமெரிக்காவின் அனைத்து சட்டப்பூர்வ பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் அடையாளத்தை ஏற்படுத்த தீவிரப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.