இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் : உலக வங்கி எச்சரிக்கை

டில்லி

ந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவுக்கு இந்த வருடம் பருவமழை வழக்கத்தைவிட விரைவில் ஆரம்பிக்கும் எனவும் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.    சென்ற வருடத்தை விட இந்த வருடம் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.   மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இந்த வருடம் நாஅட்டின் நிதி நிலை 8% வரை உயர வாய்ப்புள்ளது” என நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த  வருடம் முதல் காலாண்டில் பொருளாதாரம் 7.2% வளர்ச்சி அடைந்துள்ளது.   கடந்த ஐந்து காலாண்டுகளில் இதுவே அதிகபட்சமான வளர்ச்சி ஆகும்.  அதே நேரத்தில் உற்பத்தித் துறையின் நிதி வளர்ச்சி குறைந்து வருகிறது என மற்றொரு ஆய்வு தெரிவிக்கின்றது.   உற்பத்தித் துறை வளர்ந்து வருவதாக அரசு தெரிவித்த போதிலும்  கச்சா எண்ணெய் விலை உயர்வால் லாபம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு லாபம் குறையும் போது வேலை வாய்ப்புக் குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது.   உலக வங்கி சமீபத்தில் தெற்கு ஆசிய நாடுகளில் வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.  தெற்கு ஆசிய நாடுகளில் முக்கிய நாடான இந்தியாவில் இந்த வேலை வாய்ப்பின்மை அதிகபட்சமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.  குறிப்பாக அமைப்பு சாரா தொழிலில் உள்ள பலருக்கு வேலை வாய்ப்பின்மை அதிகமாக வாய்ப்புள்ளது என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.