புதுடெல்லி: இந்தியா, கொரோனா நெருக்கடிகளிலிருந்து வெளிவர வேண்டுமெனில், சுகாதாரம், தொழிலாளர், நிலம், திறன், நிதி போன்ற துறைகளில் முக்கியமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென உலக வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், பொருளாதார வளர்ச்சி குறித்த தன் கணிப்பை மேலும் குறைக்க வேண்டியதிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தொடரும் கொரோனா தொற்று பரவல், நிதித்துறையில் கூடுதல் நெருக்கடி என பல சவால்கள் அண்மை வாரங்களில் எழுந்துள்ளன. இதன் அடிப்படையில் பார்க்கையில், வளர்ச்சியில் மேலும் கடுமையான சரிவு காணக்கூடும் என தெரிகிறது.

இதுகுறித்த மீள் பார்வையை, அக்டோபர் மாத அறிக்கையில் காணலாம். இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.6% என்பதாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆண்டில் 5.5% என்பதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.