பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றார் உலக அழகி மானுஷி சில்லர்

டில்லி,
லக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மானுஷி சில்லர், பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சமீபத்தில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் கலந்துகொண்ட இந்திய அழகி மானுஷி சில்லர் அதில் வெற்றிபெற்று உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுமார், 17 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சார்பில் பங்கேற்ற மானுஷி சில்லர் உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்று பெருமை சேர்த்ததற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், உலகஅழகிப் பட்டம் வென்ற பின்  இந்தியா திரும்பிய மானுஷி சில்லர்  பிரதமர் மோடியை முதன் முதலில் நேரில் சந்தித்து  வாழ்த்து பெற்றார்.

அதைத்தொடர்ந்து சொந்த மாநிலமான அரியான சென்ற அவருக்கு   உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரையும் மானுஷி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.