வரலாற்று சாதனை படைத்தார் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்

லக மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் ஆறாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மேரி கோம் வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

டில்லியில் நடைபெறும் உலக மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் பிரபல இந்திய வீராங்கனை மேரி கோம் கலந்துகொண்டார். இறுதிப் போட்டியில் 5:0 என்ற கணக்கில்  இவர், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை ஹன்னா ஒகோடாவை

35 வயதான மேரி கோம் எட்டு வருடங்களுக்கு பின் மீண்டும் பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டையில் கடைசியாக மேரி கோம் பதக்கம் வென்றது 2010-ஆம் ஆண்டில்தான்.

மேலும் உலக மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் ஆறாவது முறையாக தங்கப் பதக்கம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார் மேரிகோம்.

பதக்கம் வென்ற மேரி கோம், “கடந்த சில வருடங்களாக  என்னால் போட்டிகளில் சரிவர திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. என்னுடைய எடைப்பிரிவு மாறியதும் பெரிய சவாலாக இருந்தது. இன்றைய வெற்றி மூலம் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னை உற்சாகப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

#worldboxingchampionship #final #marykom #wins #historic #sixthtitle