உலகக் குத்துச்சண்டைப் போட்டி – இந்தியாவின் சிம்ரன்ஜித் & மணிஷா தங்கம் வென்றனர்!

புதுடெல்லி: உலகக்கோப்பை குத்துச்சண்டை தொடரில், இந்திய வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கெளர்(60 கிகி எடைப்பிரிவு) மற்றும் மணிஷா (57 கிகி எடைப்பிரிவு) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

இந்த உலகக்கோப்பை குத்துச்சண்டை தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது.

சிம்ரன்ஜித் கெளர், இறுதிப்போட்டியில், ஜெர்மனியின் மாயா கிளீன்ஹான்ஸுடன் மோதினார். அப்போட்டியில், 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று தங்கத்தை வென்றார்.

அதேபோன்று, 57 கிகி எடைப்பிரிவில், இந்தியாவின் மணிஷா, தனது சக வீராங்கனை சாக்சியை 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி, தங்கத்தை தட்டிச் சென்றார்.

இத்தொடரில், மொத்தமாக 3 தங்கம், 2 வெள்ளிகள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய அணி, மொத்தமாக 9 பதக்கங்களை வென்று, தொடரில் இரண்டாமிடம் பிடித்தது.