ஆடவருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர்: இந்தியவீரர் அமித் பங்கால் பதக்கம் பெறும் வாய்ப்பு

கேத்தரின்பர்க்

டவருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் அமித் பங்கால் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்து பதக்கம் பெறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மெய்னாவைச் சேர்ந்த 23 வயதான ராணுவவீரரான அமித் பங்கால் ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப், மற்றும் காமன்வெல்த் விளையாட்டு வெள்ளிப் பதக்கம் வென்றவர்.

தற்போது, ரஷ்யாவின் கேத்தரின்பர்க் நகரில் நடைபெற்று வரும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித் பங் கால் தனது 3-வது சுற்றில் துருக்கி யின் பதுஹான் சிட்சியை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கத் தில் இருந்தே ஆதிக்கம் செலுத் திய அமித் பங்கால் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கால் இறுதி சுற்றில் அமித் பங் கால், பிலிப்பைன்ஸின் கார் லோவை (Carlo Paalam ) எதிர்கொள்கிறார்.  ஏற்கனவே  கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியின் அரை இறுதியில் கார்லோவை, அமித் பங்கால் வீழ்த்தியிருந்தார். அதுபோல இன்றைய போட்டியிலும் அவரை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதுபோல, 63 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மணீஷ் கவுசிக் 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் சின்ஸோரிக்கை வீழ்த்தி கால் இறுதியில் கால்பதித்தார். கால் இறுதி சுற்றில் மணீஷ் கவுசிக், பிரேசிலின் வாண்டெர்சன் டி ஆலி வேராவை எதிர்கொள்கிறார். ஆலி வேரா தனது 3-வது சுற்றில் 3-2 என்ற கணக்கில் ஜப்பானின் டெய்சுக் நரிமட்சுவை தோற்கடித்தார்.

91 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சஞ்ஜீத், 2-ம் நிலை வீரரான உஸ்பெகிஸ்தானின் சஞ்சர் துர்சுனோவை எதிர்த்து விளையாடினார். இதில் சஞ்ஜீத் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் நுழைந்தார். கால் இறுதியில் 7-ம் நிலை வீரரான ஈக்வேடாரின் ஜூலியோ சீசா காஸ்டிலோ டோரஸுடன் மோதுகிறார் சஞ்ஜீத்.