தோகா

தோகாவில் நடைபெறும் உலக சாம்பியன் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதித் தகுதிக்கு முதல் முறையாக ஒரு இந்தியப் பெண் தகுதி பெற்றுள்ளார்.

 

தற்போது தோகாவில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து சாதனை பெற்று வருகிறது.   இரு தினங்களுக்கு முன்பு கலப்பு தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.

நேற்று நடந்த ஈட்டி எறிதல் அரை இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பெண் வீராங்கனை அனு ராணி 62.43 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.   இந்தப் போட்டிகளில் இறுதிச் சுற்றில் நுழைந்த முதல் இந்தியப் பெண் என்னும் தகுதியையும் அனு ராணி பெற்றுள்ளார்.