ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.66 கோடியை தாண்டி இருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.66 கோடியை தாண்டி உள்ளது.

இதையடுத்து, தற்போது 11,66,49,957 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,22,58,275 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25 லட்சத்து 91 ஆயிரத்து 104 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்னமும் 2,18,00,578 பேர் சிகிச்சை பெற அவர்களில் 89,467 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 66,296 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. பிரேசிலில் 75,337 பேருக்கும், ரஷ்யாவில் 11,024 பேருக்கும் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டு உள்ளது.