டெல்லி: 2011 உலகக்கோப்பை பைனலில் தோனியின் பேச்சை கேட்டதால், சதத்தை கோட்டைவிட்டதாக கூறிய கம்பீரை, இணையத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


2011ம் ஆண்டு உலகக்கோப்பை பைனலில் இந்திய அணியின் தொடக்க வீரர் கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்தில் இந்தியா வென்று உலகசாம்பியன் ஆனது.
கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து பைனலில் தமது சதத்தை கோட்டை விட்டதற்கு தோனியே காரணம் என்று கம்பீர் இப்போது கூறி இருக்கிறார். அவரது இந்த குற்றச்சாட்டுக்கு தோனி ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


பாஜக எம்பி என்பதால், இப்போது தோனியை பற்றி தவறாக பேசுவதாக பலர் டுவிட்டரில் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர். இது குறித்து நீச்சே டாப்பர் என்பவர் தமது பதிவில் கூறி இருப்பதாவது:


தோனி ராணுவத்தில லெப்டினென்ட் பதவியை பெற்றவர். ராணுவத்தில் இணைந்து பாதுகாப்பு பணிக்காக சென்றவர். ஆனால் தற்போது கம்பீரோ எம்பி. டெல்லி காற்று மாசுபாடு பிரச்னைக்கான கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தவர். இந்தூரில் ஜிலேபியை சாப்பிட்டுக் கொண்டிருந்தவர். ஆனால் இப்போது தோனியை குறை கூறுகிறார் என்று விமர்சித்து இருக்கிறார்.


கப்பிஸ்தான் ரேடியோ என்பவர் ஜிலேபி விவகாரத்தை முன்வைத்து கம்பீரை கிண்டல செய்திருக்கிறார். அவர் கூறியதாவது: இன்னும் சில ஆண்டுகள் கழித்து, இந்தூருக்கு சென்று ஜிலேபி சாப்பிட்டு வா என்று என்னை அனுப்பியவர் என்று கூறுவார் என்று கூறி இருக்கிறார்.


இது இப்படி இருக்க பாலிவுட் காண்டு என்ற பெயரில் வெளியாகி இருக்கும் விமர்சனம் ஏகத்துக்கும் ஹிட் அடித்திருக்கிறது. அதன் விவரம் வருமாறு:
செய்தியாளர்: டெல்லி காற்று மாசுபாடு பற்றி ஏதாவது சொல்லுங்களேன்?
கம்பீர்: 2011ம் ஆண்டு உலகக்கோப்பை பைனல், தோனியை கோப்பையை வென்றார். அப்போது எல்லோரும் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அதனால் தான் இன்று டெல்லியில் காற்று மாசுபட்டிருக்கிறது