உலகக் கோப்பை 2019 இரண்டாம் அரையிறுதி :  ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து தோற்கடித்தது

ண்டன்

நேற்று நடந்த உலக்கோப்பை 2019 போட்டியின் இரண்டாம் அரையிறுதியில் இங்கிலந்து அணி ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டிகளில் நேற்று இரண்டாம் அரையிறுதி போட்டி எட்க்பாஸ்டன் அரங்கில் நடந்தது.  இந்த போட்டியில்  இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின.   டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி திறம்பட விளையாடியதுஇ.   ஆயினும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களிடம் தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.   அதிக பட்சமக ஸ்டீவ் ஸ்மித் 119 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார்.    அடுத்ததாக அலெக்ஸ் கேரி 70 பந்துகளில் 46 ரன்களும் மிச்சல் ஸ்டார்க் 36 பந்துகளில் 29 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது  அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியினர் அபாரமாக ஆடி 32.1 ஓவர்களில் 226 ரன்கள் எடுத்தது.  எனவே இங்கிலாந்து அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை நியுஜிலாந்து வென்றுள்ளது.  வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள இறுதிச் சுற்றில் எப்க்லினாண்டும் நியுஜிலாந்தும் மொத உள்ளன.   இந்திய நேரப்படி இந்த போட்டி மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.

கார்ட்டூன் கேலரி