உலகக் கோப்பை 2019 : ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா

பிரிஸ்டல்

நேற்று பிரிஸ்டலில் நடந்த உலகக் கோப்பை 2019 தொடரின் 4 ஆம் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் அணியை வென்றுள்ளது.

உலகக் கோப்பை 2019 தொடரில் நேற்று நான்காம் போட்டி பிரிஸ்டலில் நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணியுடன் ஆஸ்திரேலிய அணி மோதியது. டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி ஆரம்பித்த சில நிமிட நேரத்தில் தொடக்க ஆட்டகாரர்கள் இருவரும் ஒரு ரன்கள் கூட எடுக்காமல் ஆட்டத்தை இழந்தனர்.

அதை தொடர்ந்து மேலும் விக்கட்டுகள் விழத் தொடங்கின. போட்டியின் 20 ஆம் ஓவர் முடிவில் ஆப்கன் அணி ஐந்து விக்கட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அத்துடன் அடுத்தடுத்து விக்கட்டுகள் விழவே ஆப்கன் அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. அப்போது ஆப்கன் அணி 207 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் நஜிபுல்லா 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் எடுத்திருந்தார். அவர் எடுத்த மொத்த ரன்கள் 51 ஆகும். அவருக்கு அடுத்தபடியாக ரமத் ஷா 60 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் அடித்திருந்தார். அவர் எடுத்தது மொத்தம் 43 ரன்களாகும்.

வெற்றி இலக்காக 208 ரன்களுடன் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே ரன்களை குவித்து வந்த அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்தனர். ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்து ஏழு விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் 114 பந்துகளில் 8 பவுண்டரிகளை அடித்தார். அவர் இந்த போட்டியில் 89 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பிஞ்ச் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அடித்தார். அவர் இந்த போட்டியில் 66 ரன்கள் எடுத்திருந்தார்.

இதுவரை நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலிய 5 முறை கோப்பையை வென்றுள்ளது.

கார்ட்டூன் கேலரி