பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமை அவுட்டாக்கியது கனவு போல் இருந்தது: சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்

மான்செஸ்டர்:

பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமை அவுட் ஆக்கியது கனவு போல் இருந்ததாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமுக்கு குல்தீப் யாதவ் வீசிய பந்து மேஜிக் போன்று இருந்தது.
பந்து வெளியே செல்லும் என நினைத்து அரைகுறையாக முன் காலை நீட்டினார் பாபர் ஆசம்.

ஆனால் பந்து திடீரென உள்ளே புகுந்து போல்டாக்கியதை பாபர் ஆசத்தால் நம்ப முடியவில்லை.

ஒருவேளை பாபர் ஆசம் பேக் அண்ட் அக்ராஸ் போயிருந்தால், போல்ட் ஆவதிலிருந்து தப்பி இருக்கலாம்.

இது குறித்து குல்தீப் யாதவ் கூறும்போது, பாபர் ஆசமை அவுட்டாக்கியது இந்த ஆட்டத்தில் சிறப்பானது. இதேபோன்று ஆசிய கோப்பை போட்டியிலும் அவுட் ஆக்கியிருக்கிறேன்.

மழைக்குப் பிறகு பந்தின் போக்கை கண்காணித்தேன். பந்து சறுக்கி சுழன்று சென்றது. இப்படி பந்து செல்வதை சுழற்பந்து வீச்சாளர்களும் விரும்புவார்கள்.

இந்த பந்து வீச்சு கனவாகவும், சரியான சோதனை வீச்சாகவும் இருந்தது. இவ்வாறு செல்லும் பந்து பேட்ஸ்மேனை மேலே தூக்கி அடிக்கும் தவறை செய்ய வைக்கும்.

பாபர் ஆசாமும், ஃபக்கார் ஜமானும் சுழற்பந்தை நன்கு அடித்து விளையாடினார்கள். இந்த ஜோடியை   பிரித்தது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது.

பாபரை அவுட் ஆக்கியபின், அடுத்த விக்கெட்டையும் எடுத்தது பாகிஸ்தானை பதற்றப்பட வைத்துவிட்டது.
டிஎல்எஸ் விதிப்படி அவர்கள் அதிக ரன் ரேட் எடுக்க வேண்டியிருந்தது. இதுவெல்லாம் எங்களுக்கு வாய்ப்பாக அமைந்தது என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published.